உரக்கடைகளுக்கு எச்சரிக்கை! இனிமேல் இவ்வாறு செய்தால் லைசன்ஸ் ரத்து!!

இந்தியாவிலேயே அதிக அளவு கஷ்டப்படுவது யாரென்றால் விவசாயிகள் என்றே கூறலாம். ஏனென்றால் நாளுக்கு நாள் அவர்கள் விவசாயம் செய்வதற்கு ஏற்றது போல் சூழ்நிலை அமைய வில்லை.

அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கு தேவையான உரங்களுக்கும் ஆங்காங்கே இன்னல்கள் நடந்து கொண்டுதான் வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு உரகடைகளுக்கு தற்போது அதிரடி எச்சரிக்கை ஒன்றினை கூறியுள்ளது.

அதன்படி மானிய உரங்கள்  விற்பனையில் இதர விவசாய இடு பொருட்களை விற்றால் அந்த கடை உரிமம் கண்டிப்பாக ரத்து செய்யப்படும் என்று தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதன்படி விவசாயிகளிடமிருந்து வரப்பட்ட புகாரை அடுத்து இந்த உரைகளில் கட்டாயமாக இடுபொருட்களை விற்கிறார்களோ அந்த உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதர பொருட்களை வாங்க விவசாயிகளை கட்டாயப்படுத்தினால் கூடுதல் செலவு செய்யும் சூழல் கூட ஏற்படும் என்று வேளாண்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment