Connect with us

46 மாவட்டங்களுக்கு வார்னிங்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க உத்தரவு

News

46 மாவட்டங்களுக்கு வார்னிங்: கட்டுப்பாடுகளை அதிகரிக்க உத்தரவு

ed6e64905ce4c313ef7b5e569e41be8f

நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உள்ள 46 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு 10 சதவீதம் அதிகமாக இருப்பதாகவும் 56 மாவட்டங்களில் 5 முதல் 10 சதவீதம் இருப்பதாகவும் மேற்கண்ட மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

பொதுமக்கள் கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தால் கூட மூன்றாவது அலை தோன்றி விடும் என்றும் டெல்டா வைரஸ் என்ற மூன்றாவது அலை தோன்றினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் எனவே பொதுமக்கள் கவனக்குறைவாக இல்லாமல் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

46 மாவட்டங்களில் கூட்டங்கள் போடுவதை தவிர்க்கவும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநில அரசுகளை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

எனவே சென்னை உள்பட ஒரு சில தமிழகத்திலுள்ள ஒருசில மாவட்டங்களில் கட்டுப்பாடு அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top