
Tamil Nadu
மக்களே அடுத்த 3 நாட்களுக்கு மதியம் வெளியே செல்ல வேண்டாம்!! வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என எச்சரிக்கை!!
நாளைய தினம் மே மாதம் தொடங்குகிறது மே மாதம் தொடங்கினாலே மக்கள் அச்சத்தில் இருப்பார்கள். ஏனென்றால் மே மாதத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இதனால் பகல் நேரங்களில் கூட மக்கள் வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெப்ப நிலை அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மேலும் கஷ்டத்தை கொடுத்துள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
2,3, 4 ஆகிய 3 தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான வானிலை மையம் கூறியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டி பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
