‘உறைபனி…’ நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

நடப்பாண்டில் குளிர்காலமானது சற்று அதிகமாகவே காணப்பட்டது என்றே கூறலாம். ஏனென்றால் தமிழகத்தில் உள்ள பல இடங்களில் மூடுபனியானது அதிகளவு நிலவிக் கொண்டு வருகிறது.

மேலும் வட மாநிலங்களில் நிலைமை தலைகீழாக உள்ளது என்றே கூறலாம். இதன் விளைவாக சுமார் 15 ரயில் சேவைகள் தாமதமாக இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில் நேற்றைய தினம் கூட சென்னை வானிலை ஆய்வு மையம் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் உறைபனி நிலவும் என்று அறிவித்திருந்தது.

அதிலேயே தான் இன்றைய தினமும் அறிவித்துள்ளதாக காணப்படுகிறது. அதன்படி நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மேலும் இரண்டு தினங்களுக்கு இரவு நேரங்களில் உறைபனிக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

உள் மாவட்டங்களில் பொருத்தவரை குறைந்தபட்ச வெப்பநிலையானது இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.