
Tamil Nadu
மீனவர்களுக்கு எச்சரிக்கை-நான்கு நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்!!
இந்த கோடைகாலத்தில் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. ஏனென்றால் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக மாற வாய்ப்புள்ளது. எனவே மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இன்று தெற்கு அந்தமான் கடல்-தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசி வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. நாளைய தினம் அந்தமான் கடல், தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மே 8, 9 ஆகிய தேதிகளில் வங்கக்கடலில் தென்கிழக்கு, மத்திய கிழக்கு பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 10ஆம் தேதி வங்கக் கடலில் மத்திய மேற்கு, மத்திய கிழக்குப் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
மணிக்கு 40 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி வீசி வாய்ப்பு உள்ளதால் மீனவர்களுக்கு தொடர்ந்து நான்கு நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
