Connect with us

கட்டுப்படுத்த முடியாத பலத்த சூறாவளி-இன்றும் நாளையும் மீனவர்கள் எச்சரிக்கை!!

fishers 2

செய்திகள்

கட்டுப்படுத்த முடியாத பலத்த சூறாவளி-இன்றும் நாளையும் மீனவர்கள் எச்சரிக்கை!!

பொதுவாக மழைக்காலம் என்றாலே மீனவர்களுக்கு பல்வேறு விதமான எச்சரிக்கைகள் விடுக்கப்படும். ஆனால் கோடை காலத்தில் இன்றைய தினம் வானிலை மையம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது மிகுந்த ஆச்சரியத்தை  ஏற்படுத்தி உள்ளதாக காணப்படுகிறது.

ஏனென்றால் கடந்த வாரம் வங்கக்கடல் பகுதியில் உருவான  புயலின் காரணமாக தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்தது. மேலும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து தரைக்காற்று வீசப்பட்டது.

அக்னி நட்சத்திரத்தை அணைத்த மழை..!! இன்னும் ஐந்து நாட்களுக்கு தொடரும்..!!

இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. அதிலிருந்து மீனவர்களுக்கு குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு செல்ல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய தினம் வங்கக் கடலின் மத்திய கிழக்கு பகுதி, வட அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் லட்சத்தீவு, கர்நாடகா, கேரள, தென் தமிழகக் கரையோரத்தில் இன்று பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது.

நாளைய தினம் வங்ககடலில் மத்திய கிழக்கு, வட அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் கூறியுள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால்  மீனவர்களுக்கு இன்றும் நாளையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top