Connect with us

14 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று கனமழை பெய்ய வாய்ப்பு;

rain chennai4101 1638687228

தமிழகம்

14 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!! இன்று கனமழை பெய்ய வாய்ப்பு;

அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 14 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

கரு கரு மேகம்…. தமிழகத்தில் இன்னும் நாலு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு!!

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழை வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top