தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான யுவன்சங்கர்ராஜா சற்றுமுன் தனது டுவிட்டர் தளத்தில் ஒரு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது:
னது நிறுவனம் ஒய்எஸ்ஆர் பிரைவேட் லிமிடெட் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் சார்பில் நான் இதனை அதிகாரபூர்வமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் பணம் மற்றும் ஒப்பந்தங்கள் தொடர்பாக யாருக்கும் எந்தவித அதிகாரமும் அளிக்கவில்லை. அப்படி என் பெயரிலோ எனது நிறுவனத்தின் பெயரிலோ யாரேனும் ஏதும் பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டாலோ அல்லது ஒப்பந்தம் மேற்கொண்டாலோ அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
என்னைத் தவிர ஒய் எஸ் ஆர் பிரைவேட் ஃபிலிம்ஸ் மற்றும் யுஐ ரெக்கார்ட்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பில் பணப் பரிவர்த்தனை செய்ய அதிகாரம் இல்லை. தங்கள் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி”. இவ்வாறு யுவன் தெரிவித்துள்ளார்.