ரயில்வே வேலையில் சேர விரும்புபவர்களுக்கு எச்சரிக்கை! இவற்றிலெல்லாம் ஈடுபட்டால் நிரந்தர தடை!!
மத்திய அரசு பணி என்றாலே எந்த ஒரு கவலையும் இல்லாத பணியாகவே மக்கள் மனதில் பதிந்துள்ளது. மாநில அரசுப் பணிகளை விட மத்திய அரசு பணிக்கு அதிக அளவு மதிப்பு காணப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் ரயில்வே பணி.
இந்த ரயில்வே வேலையில் சேர விரும்புபவர்களுக்கு தற்போது எச்சரிக்கைகளை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ரயில்வே வேலையில் சேர விரும்புபவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்நாளில் நிரந்தரத் தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
ரயில் மறிப்பு போராட்டம், ரயில் தண்டவாளங்களில் போராட்டம் நடத்துவது, ரயில் சொத்துக்களை சேதப்படுத்துவது உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவது கவனத்திற்கு வந்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளது.
இது போன்ற வேலைகள் ஒழுங்கீனமானவைகள் என்பதால் அவர்கள் ரயில்வே வேலைக்கு பொருத்தமான்வர்கள் அல்ல என்று முடிவு எடுத்துள்ளதாக உள்ளது. இதுபோன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் காவல் துறைக்கு ஒப்படைக்க படுவார்கள் என்றும் அவர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்வே வேலைகளில் விண்ணப்பிக்க தடை விதித்தும் ரயில்வே அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஆட்கள் தேர்வு நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்த ரயில்வே தேர்வு வாரியம் உறுதி கொண்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
