Connect with us

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது! கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

kallakurichi 16580395713x2 1

தமிழகம்

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடக்கூடாது! கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!!

நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பெரும் கலவரம் வெடித்தது. இந்த கலவர வழக்கில் கைதான 108 பேருக்கு வருகின்ற ஒன்றாம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது.

சிறார் சிறப்பு நீதிமன்றம் கள்ளக்குறிச்சி இரண்டாம் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் 108 பேர் ஆஜர் படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளாதீர்கள் என்று கூறப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் போராட்டத்தில் மக்கள், இளைஞர்கள் பங்கேற்க கூடாது என்றும் கூறுகிறது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் ஈடுபட்டதாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீஸ் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. கலவரம் தொடர்பாக கைதானவர்கள் மீது பத்துக்கும் மேற்பட்ட பிரிவில் கள்ளக்குறிச்சி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சியில் நடந்தது திடீர் கோபத்தில் வெடித்த வன்முறை அல்ல, திட்டமிட்ட சம்பவம் என்று ஹை கோர்ட் நீதிபதி கூறியுள்ளார். வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் நீதிபதி சதீஷ்குமார் கூறியுள்ளார்.

வன்முறையாளர்களை கண்டறிந்து பள்ளியில் ஏற்பட்ட இழப்பை அவர்களிடம் இருந்து கண்டிப்பாக வசூலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மாணவியின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்து வழக்கில் டிஜிபிஐக்கு உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் ஆணையிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி பள்ளி கலவர வழக்கில் சிறப்பு படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம் என்று நீதிபதி கூறினார்.

தனியார் பள்ளியில் டிராக்டரை கொண்டு பஸ்ஸை மோதிய சம்பவமே ஒட்டுமொத்த வன்முறைக்கும் காரணம் என்றும் நீதிபதி கூறினார். கள்ளக்குறிச்சி மாணவி மரணம் பற்றி வழக்கு தொடர்ந்து பிறகு போராட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்றும் கேள்வியை எழுப்பியது உயர் நீதிமன்றம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top