Connect with us

கவின்- சாண்டி குரூப்பை வார்ன் பண்ணுங்க.. இல்லே வெளியே அனுப்புங்க

Entertainment

கவின்- சாண்டி குரூப்பை வார்ன் பண்ணுங்க.. இல்லே வெளியே அனுப்புங்க

விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ், முந்தைய சீசன்களைவிட, அதிக அளவிலான விஷயங்கள் நடக்கப் பெறுவதாலோ என்னவோ இதன்மீதான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

முகேன் முரட்டுத்தனமான கோபம், சாண்டி கவின் தவறுகளுக்கு ஆதரவு அளித்தல், கவின் சேரன் மற்றும் கஸ்தூரியை வயது வித்தியாசமில்லாமல் கிண்டல் செய்வது, தர்சன் தன்னுடைய உண்மையான முகத்தை வெளிப்படுத்தியது, லோஸ்லியா சேரனை அனைவரையும் நக்கல் செய்வதும், அப்பாவித்தனமான முகத்தை மறந்து சண்டைக் காரியானது என வாரம் முழுவதும் இவர்களது ஆட்டத்தை சகிக்க முடியாமல் இருந்த மக்களுக்கு விடிவுகாலம்தான் இந்த வார இறுதி, நேற்றைய நிகழ்ச்சியில் கமல்ஹாசன்

e538d9602fe17839a74b4d6b325828f8

நேற்று வழக்கம்போல் கமல்ஹாசன் பிக் பாஸ் போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். வனிதாவின் வருகை குறித்து ஒவ்வொருவரிடமும் கேட்டறிந்தார்.

கடந்த வாரம் சாண்டி அண்ட் கோ, ஆணென்னங்க பெண்ணென்னங்கன்னு ஒரு கானா பாடலை எல்லா இடங்களிலும் பாடினர். சேரன், கஸ்தூரி, மதுமிதாவை டார்கெட் செய்ய நினைத்து பாத்ரூம், ஹால், வெளியே புல்வெளி என அனைத்து இடங்களிலும் பாடினர்.

அவர்களுடன் சேர்ந்து ஆட்டம் போட்டார் லாஸ்லியா, இதனை யாராலும் சகித்துக் கொள்ளவே முடியவில்லை.

நிச்சயம் இதற்கு இன்று வார்னிங்க கிடைக்க வேண்டும், இல்லையேல் இவர்கள் இந்த மாதிரியான அவலங்களைத் தொடர்ந்து செய்வர். இதுபற்றி பெரிய அளவிலான் கேள்விகள் நேற்று கேட்கப்படவில்லை என்றாலும், இன்று நிச்சயம் பெரிய அளவில் கமல்ஹாசனிடம் வாங்கிக் கட்டிக் கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top