பலத்த சூறாவளி; ஐந்து நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை!!

யாரும் எதிர் பாதாவிதமாக தற்போது வானிலை ஆய்வு மையமானது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இந்த மிதமான மழையானது இன்று முதல் பிப்ரவரி ஒன்று வரை உள்ள ஐந்து நாட்களில் தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

காரணம் என்னவென்றால் வங்க கடல் பகுதியில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே ஆகும். இந்த நிலையில் மீனவர்களுக்கும் வானிலை ஆய்வு மையம் சில எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.

அதன்படி இன்று தென்கிழக்கு வங்க கடல், நிலநடுகோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் கிழக்கு பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. ஜனவரி 24 ஆம் தேதியில் தென்மேற்கு, தென்கிழக்கு வங்க கடல் பகுதி, இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி வீசப்படும் என்றும் கூறியது.

ஜனவரி 30 ஆம் தேதியில் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு, தென் கிழக்கு வங்க கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசப்படும் என்றும் கூறியுள்ளது.

ஜனவரி 31ஆம் தேதியில் தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல், இலங்கை கரையோரத்தில் சூறாவளி வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. பிப்ரவரி ஒன்றாம் தேதி இலங்கை கரையோரம், தென்மேற்கு வங்க கடல், தென் தமிழக கரை மன்னார் வளைகுடா, குமரி கடலில் சூறாவளி வீசும் என்றும் கூறியுள்ளது.

இந்த காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் ஐந்து நாட்களுக்கு எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.