Connect with us

கரை புரண்டு ஓடும் காவிரி! மீண்டும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

Cauvery

தமிழகம்

கரை புரண்டு ஓடும் காவிரி! மீண்டும் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!!

தொடர்ந்து தமிழகத்திற்கு கர்நாடகா அரசு காவிரி நீரினை அதிக அளவு திறந்து விட்டு வருகிறது. மேலும் கர்நாடகா அணைகள் நேற்றைய தினம் கூட அதிக அளவு உபரி நீரை திறந்து விட்டது.

இந்த நிலையில் தமிழகத்தின் பிரதான அணையாக கருதப்படுகின்ற மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதாக காணப்படுகிறது. இதனால் தொடர்ந்து கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

அதன் வரிசையில் சேலம் மாவட்டத்தில் காவிரி கரையோர மக்களுக்கு மீண்டும் மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

மேட்டூர் அணையிலிருந்து சுமார் 2. 10 லட்சம் கன அடி நீர் வெளியேற வாய்ப்புள்ளதாகவும் ஆட்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் காவேரி கரையில் மக்கள் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம் மாவட்டத்தில் இருகறைகளையும் தொட்டவாறு கரைபுரண்டு ஓடுகிறது காவிரி நீர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top