தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் வாரிசு. இந்த படத்தில் தளபதிக்கு ஜோடியாக ராஷ்மிகா கமிட்டாகியுள்ளார்.
அதே போல் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், ஷ்யாம், யோகி பாபு, ஜெயசுதா, குஷ்பு என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வரும் படமானது ஃபேமிலி சென்டிமென்ட் ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதே சமயம் வருகின்ற 2023 பொங்கலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன் படி, வாரிசு படத்தில் 6 பாடல்கள் உள்ள நிலையில் முதல் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக கூறப்படுகிறது..
அதோடு இதுகுறித்த தகவல் இன்று மாலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.