நாளை தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 11 மாவட்டங்களில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
ஏனென்றால் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து கொண்டு வருகிறது. இருப்பினும் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி வங்கக் கடலின் தென் மேற்கு, மத்திய மேற்கு, மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. வடதமிழ்நாடு, ஆந்திர கடலோரப் பகுதிகளில் அடுத்த 12 மணி நேரத்தில் பலத்த சூறாவளி வீசக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்த காற்று மணிக்கு 30 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று சூறாவளி வீச வாய்ப்பு உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்களுக்கு எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.