உங்க பணமே வேண்டாம்!! பணத்தை வீதியில் வீசி எறிந்த வார்டு உறுப்பினர்!!!

தற்போது நம் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருந்தது. இதில் பல பகுதிகளில் திமுக வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் பல பகுதிகளில் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்தது தெரியவந்துள்ளது.

வாக்குஅதன் வரிசையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பழையநன்னாவரம் பகுதியின் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு பணம் பட்டுவாடா  நிகழ்ந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

நன்னாவரம் துணைத்தலைவர் பதவிக்கு ஆறுமுகம் மற்றும் சந்திரபாபு ஆகிய இருவருக்கிடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனால் இருவரும் வார்டு உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறப்படுகிறது.

இதில் உறுப்பினர் ஒருவர் இருவரிடமும் பணம் பெற்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஆறுமுகத்தின் தரப்பினர் அந்த வார்டு உறுப்பினருக்கு மிரட்டல் விடுத்ததால் அவர் சந்திரபாபுவிடம் தான் வாங்கிய பணத்தை கொடுக்க வீட்டிற்கு சென்றுள்ளார்.

ஆனால் சந்திரபாபு அந்த பணத்தை வாங்க மறுத்ததால் அவர் அந்த பணத்தை அவரின் வீட்டின் முன்னே வீசி எறிந்து விட்டு சென்றுள்ளார். இதை அந்த கிராம மக்கள் சுற்றிலும் ஆச்சரியத்தோடு வேடிக்கை பார்த்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment