திருச்சி: இழுப்பறியில் முடிந்த வார்டு ஒதுக்கீடு.. தனித்து களமிறங்கும் முஸ்லிம் லீக்!!!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி திருச்சியில் பாலக்கரை காஜா கடை சந்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தெற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கட்சியின் மாநில துணைச் செயலாளர் வி.எம்.பாரூக், தெற்கு மாவட்ட துணைத் தலைவர் உமர் பாரூக், மாநில நிர்வாகி அன்சர் அலி, தெற்கு மாவட்டப் பொருளாளர் பி.எம்.ஹூமாயூன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் 2 வார்டுகளை ஒதுக்கக் கோரி பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் திமுக இழுப்பறி நடத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் தெற்கு மாவட்டத்தில் வரும் திருச்சி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய வார்டு உறுப்பினர் தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனித்து போட்டியிடுவதாக கே.எம்.கே.ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment