Connect with us

உக்ரைன் மீது போர்-குண்டு மழை பொழிவு; ரஷ்யாவுக்கு நிகழும் விளைவு? எழும்பிய எச்சரிக்கை என்னென்ன?

Russia Ukraine 2 1200x768 1

செய்திகள்

உக்ரைன் மீது போர்-குண்டு மழை பொழிவு; ரஷ்யாவுக்கு நிகழும் விளைவு? எழும்பிய எச்சரிக்கை என்னென்ன?

உக்ரைன் மீது போர்-குண்டு மழை பொழிவு; ரஷ்யாவுக்கு நிகழும் விளைவு? எழும்பிய எச்சரிக்கை என்னென்ன?

இன்று காலை உலக நாடுகளுக்கு அதிர்ச்சியான அறிவிப்பை ரஷ்யா அறிவித்துள்ளது. அதன்படி உக்ரேன் நாட்டின் மீது போர் புரிய ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கி பல்வேறு நகரங்களை தாக்கி கொண்டு வருகிறது. ரஷ்யா உக்ரைன் தலைநகர் கீவ், கிழக்கு உக்ரைனில் உள்ள டோனஸக்கை ஒடேசா கார்கிவ் மரியுபோல் தாக்கி வருகிறது. ஒடேசா, கார்கிவ், மரியுபோல், மைக்கேல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை தாக்கி வருகிறது.

உக்ரைனில் பல நகரங்களில் ஏவுகணை வீசி ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். உக்ரைன் நாட்டின் மீது போர் தொடங்கியதற்கு  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நாட்டின் மீது போர் பேரழிவு ஏற்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போரால் கச்சா எண்ணெய் விலை 101  டாலராக உயர்த்தப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களில் ஒன்றான ஒடேசாவில் ரஷ்ய ராணுவ வீரர்கள் நுழைந்தனர் உள்ள விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றுவதை  ரஷ்யா மும்முரம் காட்டிக்கொண்டிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலுக்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் அறிவித்துள்ளனர். ரஷ்யாவின் நடவடிக்கையால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பெரும் சேதம் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top