உக்ரைன் மீது போர் புரிய விருப்பமா? ‘தன்னார்வலர்களுக்கு அழைப்பு’… புடின் அறிவிப்பு;
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடுமையாகப் போர் புரிந்து கொண்டு வருகிறது. அதுவும் குறிப்பாக உக்ரைன் நாட்டில் உள்ள பல பகுதிகளில் ரஷ்யா தரைமட்டமாக்கி உள்ளது. இந்த நிலையில் ரஷ்யா சில நாட்களாக உக்ரைன் மீது புரியும் போரை தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக காணப்பட்டது.
இவ்வாறு உள்ள நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் ஒரு அதிர்ச்சியான அறிவிப்பை கூறியுள்ளார். அதன்படி, உக்ரைனுக்கு எதிராக போரிட ஆர்வலர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி உக்ரைனுக்கு எதிராக போரிட விருப்பமுள்ள தன்னார்வலர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். சிறப்பு ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான வீரர்களை உக்ரைனுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சிரியா உட்பட மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள் ரஷ்ய வீரர்களுடன் இணைந்து போரிட அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே ரஷ்ய வீரர்கள் தாக்குதலில் உக்ரைன் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது அயல்நாட்டு தன்னார்வலர்களை புட்டின் அழைப்பு விடுத்துள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
