டேட்டிங் செய்ய வேண்டுமா? இந்த மெசேஜ் வந்தால் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்!

7c1021164e2151ccf0b1d6ff73f14be8-1

டேட்டிங் செய்ய பெண் வேண்டுமா? பாலியல் ஆசையை பூர்த்தி செய்ய பெண் வேண்டுமா? என்று கேட்டு வரும் மெசேஜைகளிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது 

சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் உள்ள இளம் வாலிபர்கள் மற்றும் பெண்களுக்கு டேட்டிங் செய்ய, பாலியல் ஆசையை பூர்த்தி செய்ய துணை வேண்டுமா என்று கேட்டு செல்போன்களுக்கு மெசேஜ்கள் வருகின்றன. இந்த மெசேஜில் உள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசினால் 2100 பணம் கட்டி ரிஜிஸ்டர் செய்ய வேண்டும் என்றும் அதன் பின்னர் நீங்கள் விரும்பும் துணை உங்களுக்கு கிடைக்கும் என்றும் அவர்கள் உங்களது அனைத்து தேவையையும் பூர்த்தி செய்வார்கள் என்றும் பதில் அளிக்கப்படுகிறதாம்,

இதில் இதனை அடுத்து ஆசைப்பட்டு பலர் 2100 பணம் கட்டி வருகின்றனர் என்றும் ஒரு சிலர் ஏமாந்து உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறான மெசேஜ் வந்தால் அந்த மெசேஜ்களை உடனடியாக டெலிட் செய்து விடவேண்டும் என்றும் இது பாலியல் குற்றத்திற்கு இணையானது என்றும் கூறப்பட்டு வருகிறது

மேலும் இவ்வாறான மெசேஜ் வந்தவுடன் பாலியல் தேவையை பூர்த்தி செய்வது போன்ற பெண்கள் வந்து அவர்கள் இளைஞர்களிடம் இருக்கும் பணம் நகைகளை கொள்ளையடித்து செய்யும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment