விநாயகர் சதுர்த்தியில் சோகம்: சுவர் இடிந்து 2 பேர் பலி!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் மழையினால் சுற்றுச்சுவர் இடித்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்நிலைப் பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதோடு பள்ளமான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் அரசமரத்தடியில் பூஜை செய்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அருகில் இருக்கும் சுமார் 12 அடி உயரமுள்ள சுற்றுசுவர் பொதுமக்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் பொம்மை விற்பனை செய்துகொண்டிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த அமீதா பேகம் மற்றும் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே பலியானதாக தெரிகிறது.

அதே போல் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அப்பகுதியில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து பார்வையிட அதிகாரிகள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment