முதல்வரிடம் நீதி கேட்டு நடைபயணம் : மாணவி ஸ்ரீமதியின் தாயின் அடுத்தகட்ட போராட்டம்

கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு வரும் 26ம் தேதி நடைப்பயணமாக சென்று முதலமைச்சரை சந்திக்க இருப்பதாக மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி.

மாணவி ஸ்ரீமதி மர்ம மரண வழக்கில் நியாயமான விசாரணை நடைப்பெற்று நீதி கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறோம்.

மாணவி ஸ்ரீமதி எழுதியதாக வெளியான கடிதம் என் மகளின் கையெழுத்தே இல்லை.

என் மகளுடன் படித்த 2 மாணவிகள் ரகசிய வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உண்மையில் அந்த மாணவிகள் என் மகளுடன் தான் படித்தார்களா என விளக்கம் அளிக்க வேண்டும்.

வரும் 26ம் தேதி கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் இருந்து நடைப்பயணமாக சென்னை சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு மனு அளிக்க உள்ளோம். விழுப்புரத்தில் மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment