Connect with us

வாக்குகளை கூடுதலாக காட்டிய இயந்திரம்; ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குபதிவு நிறுத்திவைப்பு!

vote counting6

தமிழகம்

வாக்குகளை கூடுதலாக காட்டிய இயந்திரம்; ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குபதிவு நிறுத்திவைப்பு!

வாக்குகளை கூடுதலாக காட்டிய இயந்திரம்; ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குபதிவு நிறுத்திவைப்பு!

தமிழகத்தில் இன்று ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இதனால் பாதுகாப்பு பணியில் சுமார் ஒரு லட்சம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆங்காங்கே அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்க அவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு வருகிறது.

இதனால் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதாகி, வாக்குப்பதிவும் நிறுத்தி வைக்கப்படுகிறது. அதன்படி தாம்பரம் 40 வது வார்டில் வாக்குப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

தாம்பரம் நகராட்சிக்குட்பட்ட 40வது வார்டில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 40வது வார்டில் வாக்குபதிவு இயந்திரத்தில் 277 வாக்குகள் பதிவான நிலையில் 2177 வாக்குகள் பதிவாகியுள்ளதாக காட்டியதால் அங்கு வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் கூடுதலாக வாக்குகள் பதிவானதாக காட்டியதால் வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதோடு மட்டுமில்லாமல் அந்த வாக்குச்சாவடியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்டதால் வாக்காளர்களும் சோகத்தில் உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top