சென்னையில் வாக்குப்பதிவு-நேரலை முறையில் கண்காணிக்கப்படும்!
இந்த ஆண்டு நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பெண்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள வார்டுகள் இட ஒதுக்கீடு கூட அதிக அளவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தலைநகர் சென்னையில் தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பதற்றம் உள்ள வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் வாக்குப்பதிவு நேரலை முறையில் கண்காணிக்கப்படும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதன்படி சனிக்கிழமை நடக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கான சென்னை வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் நேரலை முறை மூலம் கண்காணிக்கப்படும் என்று ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபடும் வகையில் கூடுதலாக 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் மாநகராட்சி ஆணையர் ககன் சந்தீப் சிங் பேடி கூறியுள்ளார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி போஸ்டர் ஒட்டும் வேட்பாளர்களுக்கு அபராதத்துடன் ரூபாய் 5000 வரை அவர்களது தேர்தல் செலவில் சேர்க்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க இரவு அதிகாலை நேரங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னையில் வாக்குப்பதிவு நடைபெறும் 1121 இடங்களில் லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் கண்காணிக்கப்படும் என்று ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
