தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் தலைமைச் செயலகத்தில் திடீர் ஆலோசனை! வாக்காளர் பட்டியலில் திருத்தம் ,பெயர் சேர்ப்பு ,நீக்கம்!!

நம் தமிழகத்தில் சில தினங்களாகவே தேர்தல் என்ற பேச்சுவார்த்தை அதிகமாகவே காணப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தற்போது 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.சத்யபிரதா சாகு

இந்நிலையில் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக உள்ளார் சத்யபிரதா சாகு. அவர் தற்போது தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். வாக்காளர் அட்டையில் பெயர் திருத்தம், நீக்கம் பற்றிய கருத்துகளை ஒவ்வொரு கட்சி சார்பிலும் கட்சியின் பிரதிநிதிகள் தெரிவிப்பார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment