ஆதாரை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கமா? அமைச்சர் விளக்கம்

ஆதார் அட்டையுடன் பல்வேறு ஆவணங்கள் இணைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது என்பதும் சமீபத்தில்கூட ஆதாருடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டை இணைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும் என்ற வதந்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இதுகுறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்ட அமைச்சர் கிரண் அவர்கள் விளக்கம் அளித்தபோது ஆதார் விவரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைக்க்காவிட்டால் அவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது என்றும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பது என்பது விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே கொண்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆதார் விவரங்களை உறுதி செய்ய வாக்காளரின் ஒப்புதல் பெறப்படுகிறது என்றும் இதற்காக அண்மையில் 6பி படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்து உள்ளார். எனவே ஆதார் எண் வாக்காளர் அடையாள அட்டை எண் இணைக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்படும் என்ற வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.