Connect with us

நம்பிக்கை வாக்கெடுப்பு! ஆட்சியை தக்கவைத்தார் ஏக்நாத் ஷிண்டே;;

Capture 9

செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பு! ஆட்சியை தக்கவைத்தார் ஏக்நாத் ஷிண்டே;;

மகாராஷ்டிராவில் 288 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முன்னிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதில் கிட்டத்தட்ட 150 எம்எல்ஏக்கள் அம்மாநில முதல்வர் ஏக்நாத் ஷிண்டே-க்கு ஆதரவாக இருந்துள்ளதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஏக்நாத் ஷிண்டே வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த 2.5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் ஆட்சி செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் தற்போது இதற்கு தீர்வு கிடைத்து விட்டதாக கூறுகின்றனர்.

மேலும் அடுத்த கட்ட ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இதில் அமைச்சர்களின் பதவி குறித்து ஆலோசனை நடைபெற்ற பிறகு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top