#breaking….சத்துணவு சாப்பிட்ட 15 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!!
கல்விக்கண் திறந்த காமராஜர் ஆட்சி காலத்தில் தமிழகத்தில் மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டம் வழங்கப்பட்டது. அதன் பின்னர் எம்.ஜி.ராமச்சந்திரன் ஆட்சி காலத்தில் மதிய சத்துணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மதிய சத்துணவு திட்டம் தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதில் சில அசம்பாவிதங்கள் நடக்கிறது ஏனென்றால் சத்துணவு அதிகாரிகள் ஒரு சிலர் சத்துணவு பொருட்களை கலப்படம் செய்வது ஆங்காங்கே காணப்படுகிறது.
இதன் விளைவால் மாணவர்களின் உடல் நலக்குறைவு பாதிப்பு ஏற்படுகிறது. இதனை தடுப்பதற்காக அடிக்கடி சத்துணவு வழங்கப்படும் பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்கள்.
இருப்பினும் ஒரு சில இடங்களில் மாணவர்கள் இது போன்ற இன்னல்கள் சிக்கித் தவிக்கின்றனர். அந்த படி தற்போது 15 குழந்தைகளுக்கு சத்துணவு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பெரும் வேதனையை அளித்துள்ளது.
இந்த சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் அருகில் உள்ளது. அதன்படி சிவகங்கை மாவட்டம் கல்லராதினிபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு உட்கொண்ட 15 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்ட குழந்தைகள் கீழபூங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
