
தமிழகம்
நாகை அருகே மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்!!!
கடந்த சில நாட்களாக சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து கொடுப்பதால் பள்ளி குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க தமிழக அரசு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கிய போதும் இன்னும் குறைந்தபாடில்லை.
அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே இருக்கும் தனியார் பெண்கள் மேல்நிலை விடுதியில் காலை உணவு சாப்பிட்ட 60க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக விடுதியில் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் துண்டு துண்டாக பல்லி இருந்ததாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறினர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ள மாணவிகள் 60 பேரை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் இருக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
