நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிப்பு! இன்று விருப்பமனு தாக்கல் செய்ய வந்த தொண்டர்கள் விரட்டியடிப்பு!!

நேற்றைய தினம் தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனை அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் கூட்டாக சேர்ந்து அறிவித்தனர்.

அதிமுக

அதன்படி டிசம்பர் 7ஆம் தேதி அதிமுக கட்சியில் ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடைபெற உள்ளது அதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் என்றும் கூறியிருந்தனர். இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அதிமுக தொண்டர்கள் விரட்டியடிக்கப்பட்ட தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட முன் வந்த அதிமுக தொண்டர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு விருப்பமான தர மறுப்பதாக பேட்டியளித்த ஓமப்பொடி பிரசாந்த் சிங்கை விரட்டியடித்தனர்.

ஓமப்பொடி பிரசாந்த் சிங் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்த போதே அவரை அடித்து வெளியில் இழுத்துச் சென்றதால் அதிமுக  அலுவலகத்தில் பரபரப்பான சூழல்  உருவானது. சென்னை ஓட்டேரியில் சேர்ந்த ஓமப்பொடி பிரசாத் சிங்கை அதிமுகவினர் தாக்கி அடித்து வெளியேற்றினர்.இதனால் அதிமுக தொண்டர்களிடையே அதிருப்தியான சூழல் உருவாகியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment