Connect with us

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் போராட்டம்!

அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் போராட்டம்!

b6e029e6863535e6d7c3aed4b8044e28-1

சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதன் மத்தியில் ஆளும் கட்சியான அதிமுக கட்சி தன்னுடன் பாரதிய ஜனதா கட்சி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியாக வைத்துள்ளது.

அதற்கான இட ஒதுக்கீடு, தொகுதி பங்கீடு ஆனது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழ் மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு அதிமுக தரப்பில் எழும்பூர் தொகுதியினை ஒதுக்கியது.

இதனால் அதிமுக தொண்டர்கள் கழகத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவர்கள் எழும்பூர் தொகுதியை கூட்டணிக்கு தரக்கூடாது எனவும் போராட்டம் புரிகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top