
தமிழகம்
அதிமுகவில் வெடித்த ஒற்றை தலைமை!! ரத்த காயங்களுடன் தொண்டர் பரபரப்பு பேட்டி;
தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுகவில் தற்போது கலவரம் ஏற்பட்டுள்ளது என்று கூறலாம். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கையானது அதிகளவு எழுந்தது.
மேலும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் மற்றும் ops ஆதரவாளர்கள் இருவரும் மாறி மாறி முழக்கமிட்டு வந்தனர். இந்த நிலையில் இன்று தொண்டர் ஒருவர் ரத்த காயங்களுடன் பேட்டி கொடுத்து வந்தது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இன்று காலை முதலே சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் ஐயா வாழ்க என முழக்கமிட்டு வந்தனர். அந்த அதிமுக நிர்வாகி செய்தியாளர்களிடம் எடப்பாடியின் ஆதரவாளரா என கேட்டு என்னை தாக்கினார் என்று ரத்த காயங்களோடு பேட்டி அளித்துக் கொண்டு வருகிறார்.
மோதலில் காயமடைந்த நிர்வாகி மாரிமுத்து ரத்தக்கறையுடன் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒற்றை தலைமை தொடர்பாக வெடித்த உட்கட்சிப் பூசல் அடிதடி வரை சென்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரா நீ எனக் கேட்டு அதிமுக பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்கி வெளியேற்றிவிட்டதாக காயமடைந்த அதிமுக நிர்வாகி பேட்டியளித்துள்ளார்.
