5ஜி சேவையை தொடங்குகிறது வோடோபோன் .. ஜியோ, ஏர்டெல் போட்டியை சமாளிக்குமா?

இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஜியோ தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கிக் கொண்டிருக்கும் நிலையில் வோடோபோன் நிறுவனம் அடுத்த மாதம் தான் 5ஜி சேவையை தங்களது வாடிக்கையாளருக்கு வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 5ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில் மிக குறைந்தபட்சமாக ஏலம் எடுத்த நிறுவனம் வோடபோன் நிறுவனம். இந்நிறுவனம் 5ஜி சேவையை வாடிக்கையாளர்களுக்கு தருவதில் தாமதப்படுத்தியதை எடுத்து ஏராளமான வாடிக்கையாளர்களை இழந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் 5ஜி சேவைக்கான பணிகளை முடுக்கிவிட்ட வோடோபோன் தற்போது ஜூன் மாதம் 5ஜி சேவையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

வோடோபோன் நிறுவனம் ஏற்கனவே அதன் 5ஜி நெட்வொர்க்கை வெளியிடுவதற்கான நிதியைப் பெற்றுள்ளது என்றும், அதற்கு தேவையான உள்கட்டமைப்பை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிகிறது. 5ஜி நெட்வொர்க் தொடங்கும் நிலையில் OnePlus மற்றும் Xiaomi போன்ற ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்களுடன் வோடோபோன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

5g 1வோடோபோன் 5ஜி நெட்வொர்க் அறிமுகமானது ஒட்டுமொத்த இந்திய தொலைத்தொடர்புத் துறைக்கும் சாதகமான வளர்ச்சியாக இருக்கும். இது போட்டியை அதிகரிக்கும் மற்றும் சலுகை அறிவிப்புகளை ஊக்குவிக்கும் என்பதால் நுகர்வோருக்கு பயனளிக்கும்.

5G இன் சில நன்மைகள் இதோ:

4ஜி ஐ விட 100 மடங்கு வேகமான வேகத்தை 5ஜி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பயனர்கள் கோப்புகளைப் பதிவிறக்கவும், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யவும் மற்றும் கேம்களை முன்பை விட மிக வேகமாக விளையாடவும் அனுமதிக்கும்.

4ஜிஇல் சாத்தியமில்லாத புதிய பயன்பாடுகளை 5ஜி செயல்படுத்தும். இதில் ஆக்மென்ட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி மற்றும் சுய-ஓட்டுநர் கார்கள் ஆகியவை அடங்கும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews