Connect with us

தொழிற்கல்வி பாடப்பிரிவை இழுத்து மூடுங்க… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

school students

தமிழகம்

தொழிற்கல்வி பாடப்பிரிவை இழுத்து மூடுங்க… பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!!

அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாகவே பள்ளிக் கல்வித்துறை பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களை கொண்டுவந்துள்ளது. அதன் படி, தற்போது அரசுப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் ,9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.

இந்த சூழலில் இத்தகைய திட்டம் 9,10-ம் வகுப்பு மாணவர்களு இத்தகைய திட்டம் கைவிடப்படுவதாக கடந்த மே மாதம் பள்ளி கல்வித்துறை தெரிவித்தது.
இதனை தொடர்ந்து தற்போது 11ஆம் வகுப்பு தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மூட என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் கல்வி ஆணையர் எழுத்துப்பூர்வமாக உத்தரவிட்டுள்ளார்.

அதே போல் ஏற்கனவே சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 17 பள்ளிகள் மற்றும் தென்காசி மாவட்டத்தில் 9 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top