உள்ளாட்சி தேர்தலில் 3வது இடம் பிடித்த விஜய் மக்கள் இயக்கம்!

தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களுக்கு சமீபத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது என்பதும் இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வந்தது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த தேர்தலில் ஆளும் திமுக அபார வெற்றி பெற்றுள்ளது என்பதும் ஒன்றிய கவுன்சில் பதவிகளுக்கு மட்டும் திமுக வேட்பாளர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த தேர்தலில் 149 விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் போட்டியிட்டனர் என்பதும் அவர்களின் 115 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து திமுக மற்றும் அதிமுகவை அடுத்து மூன்றாவது பெரிய கட்சியாக விஜய் மக்கள் இயக்கம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியில் கூட வெற்றி பெறாத நிலையில் 115 விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment