தொழில்நுட்பம்
அசரவைக்கும் அம்சங்களுடன் விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போன் வெளியீடு!!
சீனாவில் விவோ நிறுவனத்தின் விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போன் இன்று வெளியாகியுள்ளது. இந்த விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாடலின் விலை- ரூ. 39,000
டிஸ்பிளே: விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் முழு எச்டி, 1,080×2,376 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.
சிப்செட் வசதி: இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 ஆக்டா கோர் SoC கொண்டு இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
மெமரி அளவு: இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது.
கேமரா அளவு: இந்த ஸ்மார்ட்போன் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், எஃப் / 1.79 லென்ஸ், 13 மெகாபிக்சல் செகண்டரி அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார், 13 மெகாபிக்சல் சென்சார், 32 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொண்டுள்ளது.
பேட்டரி அளவு: விவோ எக்ஸ் 60 டி ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவு: இது யூ.எஸ்.பி டைப்-சி, வைஃபை 6, புளூடூத் வி 5.2, யூ.எஸ்.பி ஓ.டி.ஜி கொண்டுள்ளது.
வண்ணம்: இது ஷிம்மர் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் போன்ற வண்ணங்களில் கிடைக்கும்.
