Entertainment
நிறைவேறாமல் போல விவேக்கின் கடைசி ஆசை!
கமலுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்கிற விவேக்கின் ஆசை நிறைவேறுவதற்குள் அவர் சென்றுவிட்டார். அஜித், விஜய், மாதவன், ரஜினிகாந்த் என்று பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் விவேக். ஏன் பல இளம் ஹீரோக்களுக்கு கூட நண்பராக நடித்து நம்மை எல்லாம் சிரிகக் வைத்திருக்கிறார். ஆனால் அவர் கமல் ஹாசனுடன் மட்டும் சேர்ந்து நடித்ததே இல்லை. கமலுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார் விவேக். இந்நிலையில் தான் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த இந்தியன் 2 படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கமலுடன் சேர்ந்து நடிக்கப் போகிறேன், என் நீண்ட கால ஆசை நிறைவேறப் போகிறது என்று சந்தோஷமாக ட்வீட் செய்தார் விவேக். ஆனால் அவரின் ஆசை நிறைவேறாமலேயே போய்விட்டது.
இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு இறந்துவிட்டார் விவேக். இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இதுவரை மீண்டும் துவங்கப்படவில்லை. ரன்வீர் சிங்கை வைத்து அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் ஷங்கர். அந்த தகவல் அறிந்த பலரும் அந்நியன் படத்தை பார்த்து வருகிறார்கள். அதில் ரயிலில் செல்லும்போது சதாவிடம் காதலை சொல்லிவிட்டு முடிந்தால் பசக்குனு ஒரு முத்தம் கொடுக்குமாறு விக்ரமிடம் கூறுவார் விவேக். அதை கேட்டு விக்ரம் பதற, இதுக்குனு கமல் சாரையா கூட்டிட்டு வர முடியும் என்று கேட்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
