Connect with us

மீண்டும் அஜித் படத்தில் இணையும் விவேக்

Entertainment

மீண்டும் அஜித் படத்தில் இணையும் விவேக்

586765ab7c78bdda56c4d64cdbba0c57

அஜித் நடித்த ‘வீரம்’, என்னை அறிந்தால்’ உள்பட பல படங்களில் நகைச்சுவை நடிகர் விவேக் நடித்துள்ளனர். அஜித்-விவேக் கூட்டணி இதுவரை அனைத்து படங்களிலும் வெற்றிகரமாக இருந்துள்ளது

இந்த நிலையில் அஜித் தற்போது நடித்து கொண்டிருக்கும் ‘விசுவாசம்’ படத்திலும் ஒரு முக்கிஅய் கேரக்டரில் நடிக்கவுள்ளார் என்பதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர்.

அஜித்துடன் மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளது குறித்து விவேக்கும் தனது டுவிட்டரில் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது, ‘அன்பு நண்பர் அஜீத்துடன் மீண்டும் கரம் கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் . வாழ்த்திய ரசிகப் பெருமக்களுக்கு என் நன்றிகள். எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வேன்’ என்று கூறியுள்ளார்.

bd7e2582b62b0004c0ff2033d8ade7f8‘விசுவாசம்’ படத்தில் விவேக் காமெடி வேடம் மட்டுமின்றி கதை திருப்பத்தை உண்டாகும் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாகவும், இந்த படம் அவருடைய நடிப்புத்திறமைக்கு ஒரு சான்றாக அமையும் என்றும் கூறப்படுகிறது

சிவா இயக்கத்தில் டி.இமான் இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், நயன்தாரா, உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top