Connect with us

இந்தியன் 2 ல் விவேக்கிற்கு பதில் நடிக்க போவது யாரு தெரியுமா? செம அப்டேட் ஆ இருக்குமே!

607fc43741456

பொழுதுபோக்கு

இந்தியன் 2 ல் விவேக்கிற்கு பதில் நடிக்க போவது யாரு தெரியுமா? செம அப்டேட் ஆ இருக்குமே!

கமல்ஹாசன் நடித்த “இந்தியன்” திரைப்படம் 1996 இல் வெளியானது, இதில் மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா மடோன்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.அதை தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் விழிப்புணர்வு அதிரடி திரில்லர் படமான இந்தியன் 2 படம் தொடங்கப்பட்டது, இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 2020 இல் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட மேலும் கொரானா காரணமாக தொடர்ந்து நிறுத்தப்பட்டது.

ஆனால் இப்போது அது இந்த ஆண்டு செப்டம்பரில் மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்த படத்தில் நடிப்பவர்களின் கால்ஷீட் கேட்டு முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா ,பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், சமுத்திரக்கனி ஆகியோர் இடம் பெற்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல் வந்துள்ளது.

1619179428 1809

இந்தியன் 2 திரைப்படத்தின்70 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 30 சதவீத காட்சிகளை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. ஆனால் டைரக்டர் ஷங்கர், தற்போது ராம்சரண் நடிக்கும் ஆர்சி 15 படத்தை பிஸியாக இயக்கி வருகிறார்.

இந்தியன் 2 ல் வயதான கெட்அப் சரியாக பொருந்த வேண்டும் என்பதற்காக டாப் மேக்அப் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்காக தான் கமல் அமெரிக்கா சென்றுள்ளார். விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் உயிரிழந்து விட்டதாலும் அவர்களுக்கு பதில் நடிக்க உள்ளர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்படும்.

பாலிவுட்டின் வாய்ப்பை நிராகரித்த கிருத்தி ஷெட்டி! காரணம் தெரியுமா?

Karthik BlackSuit DN 1200

இந்நிலையில் மற்றொரு தகவல் கிடைத்துள்ளது, இந்தியன் 2 படத்தில் 1980 களில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருந்த நவரச நாயகன் கார்த்திக் முக்கிய ரோலில் நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவேக் நடித்த ரோலில் கார்த்திக் நடிக்க போகிறாரா என ரசிகர்கள் கேட்க துவங்கி விட்டனர். அதே சமயம் விவேக் ரோலுக்கு பதிலாக நெடுமுடி வேணு ரோலில் கார்த்திக்கை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top