Entertainment
எப்போவாதுனா பரவாயில்லை… எப்பவுமே இப்படினா என்னப்பண்றது? கர்ணன் பற்றி விவேக்!
பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் கர்ணன்.
ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகியுள்ளது. அசுரன் திரைப்படத்தை தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரித்த இந்த திரைப்படம் தனுஷ் நடிப்பில் அவருடைய ரசிகர்கள் மற்றும் சினிமா ரசிகர்களால் ஏகோபித்த வரவேற்புடன் பார்க்கப்பட்டு வருகிறது.
அசுரன் போலவே கர்ணன் திரைப்படத்துக்கும், தனுஷின் நடிப்புக்கும் நல்ல விமர்சனங்கள் படம் வெளியானது முதலே தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன. முன்னதாக வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தேசிய விருது பெற்றிருந்தது. அத்துடன் அந்த படத்தில் நடித்த தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. இதற்கு முன்பாக வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான ஆடுகளம் திரைப் படத்திலும் தனுஷ் விருது வாங்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன், வடசென்னை உள்ளிட்ட பல ஹிட் படங்களை தொடர்ந்து கொடுத்து வந்தார்.
இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படமும் தற்போது வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வரவேற்பையும் பெற்றுள்ளதால் இந்தப்படமும் ஹிட் ஆகியுள்ளது. இதனால் நடிகர் விவேக் தமது ட்விட்டரில் இதை பாராட்டும் வகையில் ட்வீட் பதிவிட்டுள்ளார். தனுஷின் படிக்காதவன் படத்தில் நடிகர் விவேக், தனுஷிடம் ட்ரெய்னில் எப்போவாவது வித் அவுட்டில் சென்றால் பரவாயில்லை எப்போதுமே வித் அவுட்டில் போனால் எப்படி? என்று பேசியிருப்பார். தற்போது அதே காட்சியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ள விவேக், “எப்பவாவது ஹிட் கொடுத்தா ஓகே… எப்ப பார்த்தாலும் கொடுத்தா எப்படி தனுஷ் ப்ரோ? கர்ணன் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்!” என்று தமது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
விவேக்கின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இதனை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் நெட்பிளிக்ஸ் வெளியாக இருப்பதும், அதற்காக ரசிகர்கள் காத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எப்பவாவது ஹிட் குடுத்தா ஓகே. எப்ப பாத்தாலும் ஹிட் குடுத்தா எப்பிடி @dhanushkraja ப்ரோ?!?! #Karnan பட குழுவுக்கு வாழ்த்துக்கள் ???????????????????????????????? pic.twitter.com/Q935zez0Ad
— Vivekh actor (@Actor_Vivek) April 9, 2021
