அரசுக்கு வேண்டுகோள் வைத்த விவேக்… இதை செய்தால் நல்லா இருக்கும்!

f85aff88c2652a488464354a8bff456b

நடிகர் விவேக் தமிழக அரசுக்கு முக்கியமான வேண்டுகோளை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் விவேக். தனது நகைச்சுவையில் சமூகத்திற்கான கருத்துக்களையும் சொல்லி வரும் இவர், பல்வேறு சமூக நல செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் தற்போது விவேக் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது, ”அரும் பெரும் தமிழ்ச் சித்தர், மகான், ஒளியுடம்பாகி இறையுடன் கலந்த வள்ளல் பெருமான் – சென்னை திருவெற்றியூரில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தவர். அவர் தினமும் வடிவுடை அம்மன் கோயிலுக்கு நடந்து சென்ற திருப்பாதை ‘திருவெற்றியூர் நெடுஞ்சாலை’ என இப்போது அழைக்கப்படுகிறது.

அதை ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் மாற்றம் செய்தால், பல லட்சம் தமிழ் மக்கள் நன்றியோடு அரசை பாராட்டுவார்கள். திருவருட்பா தந்த வள்ளல் பெருமானுக்கு நாம் செய்யும் சிறப்பு ஆகும். தயை செய்து ‘வள்ளலார் நெடுஞ்சாலை’ என பெயர் மாற்றம் செய்ய ஆன்மீக தமிழ் சமுதாயம் சார்பில் வேண்டுகிறேன். நன்றி” என தெரிவித்துள்ளார். 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.