விதார்த் நடிப்பில் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாகியுள்ள கார்பன் திரைப்படம்- கனவுகளை அடிப்படையாக கொண்ட த்ரில்லர் திரைப்படம்

நடிகர் விதார்த் , மற்றும் தான்யா பாலகிருஷ்ணன் நடிப்பில் தமிழில் வெளியாகியுள்ள த்ரில்லர் திரைப்படம்தான் கார்பன்.

இப்படத்தில் விதார்த் காணும் கனவுகள் அப்படியே நடக்கிறது. தந்தை மாரிமுத்துவிடம் பேசிக்கொள்ளாத விதார்த் ஒரு நாள் தந்தை  காரில் அடிபடுவதாக கனவு காண்கிறார்.

அதன்படியே ஒரு சம்பவமும் நடக்கிறது.

நினைப்பதற்குள் அது நடந்து விடுகிறது. இதனால் தந்தை கோமாவுக்கு போகிறார், இதனால் விபத்திற்கான காரணம் தெரியாமல் தவிக்கும்  விதார்த். தந்தையை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ரூ. 10 லட்சம் தேடி அலைகிறார்.

கனவுதான் உண்மையிலேயே பலித்ததா? அல்லது வேறு யாரும் சதி செய்தார்களா என்பதை த்ரில்லர் பாணியில் வித்தியாசமாக சொல்லப்பட்டிருக்கும் படமே இந்த திரைப்படம்.

க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பாராத டிவிஸ்ட் ஆக உள்ளது. விதார்த் மிக சிறப்பான கதையை தேர்ந்தெடுத்து நடித்துள்ளார். ஜோடியாக கன்னட நடிகை தான் யா நடித்துள்ளார்.

ஆர்.ஸ்ரீனிவாசன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

த்ரில்லர் படத்தை சிலர் அதிகம் விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்ற படம் இது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment