Entertainment
விஜய் பிறந்த நாளில் அஜித் செய்யும் காரியம் இதுதான்
இளையதளபதி விஜய்யின் பிறந்த நாள் வரும் 22ஆம் தேதி அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தூத்துகுடி துப்பாக்கி சூடு சம்பவத்தின் சோகம் காரணமாக விஜய் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடவில்லை என்று கூறிவிட்டாலும் அவரது ரசிகர்கள் வழக்கம்போல் கொண்டாடவுள்ளனர்.
இந்த நிலையில் விஜய் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதிதான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஏற்கனவே ஐதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் வரும் 22ஆம் தேதி மும்பையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த படப்பிடிப்பில் அஜித், நயன்தாரா உள்பட பலர் கலந்து கொள்ளவிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பிற்காக மும்பையில் பிரமாண்டமான செட் தயாராக இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படப்பிடிப்பை அடுத்து சென்னையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜூலையில் தொடங்கும்
