வீடியோவில் இருப்பது நான் அல்ல!.. வீடியோ வெளியிட்ட குட்டி நயன்தாரா…

68696f3f50b864f5f55996778bc0beb6-1

தமிழில் என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரு படங்களிலும் தல அஜித்திற்கு மகளாக நடித்தவர் அனிகா. சமீபத்தில் வெளியான ‘குயின்’ தொடரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இளம்வயது கதாபாத்திரமாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் சில நாட்களாக அனிகா கருப்பு நிறத்தில் மோசமான உடை அணிந்து நடனம் ஆடுவது போன்ற ஒரு வீடியோ வைரல் ஆகி வந்தது. இதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இதுபற்றி விளக்கம் அளிக்கும் விதத்தில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அவர் கூறும் பொழுது “நான் பொதுவாக இதை செய்வதில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் குறிப்பிட்ட வீடியோ ஒன்றை பார்த்தேன். ஒரு பெண் கருப்பு நிற உடையில் நடனம் ஆடுகிறார். அது நிச்சயம் நான் அல்ல. அது மார்பிங் செய்யப்பட்டுள்ளது. 

பலரும் எனக்கு அதை அனுப்பி வைக்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அது என்னை சிறிது மனதளவில் தொந்தரவு செய்கிறது. அதை பார்த்த பொழுது எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அதை சிறந்த முறையில் மார்பிங் செய்துள்ளனர். அதை பார்ப்பதற்கே பிடிக்கவில்லை. நாங்கள் அதை இணையதளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.