தொடக்கப்பள்ளியில் ஸ்டாலின்; நிவாரண முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு!

கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்தது. நேற்றையதினம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததால் சென்னையில் படிப்படியாக கனமழை குறைந்துள்ளது.

மு க ஸ்டாலின்

 

சென்னை பகுதிகளில் மெல்ல மெல்ல  மழைநீர் வடிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் தற்போது நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து நேற்றைய தினமே தகவல் வெளியானது. அதன்படி தமிழக முதல்வர்  ஸ்டாலின் 200 வார்டுகளில் உள்ள நிவாரண முகாமில் தொடக்கி வைக்கும் முன்னிலையாக அவர் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள சிறப்பு மருத்துவ முகாம் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டது.

அதோடு மட்டுமல்லாமல் தற்போது தமிழக முதல்வர்  ஸ்டாலின் நிவாரண முகாமில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். சென்னை மாம்பாகத்தில் நிவாரண முகாமில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.

மாம்பாக்கம் தொடக்கப்பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. முகாமில் உள்ள அனைத்து மக்களுக்கும் நிவாரணப் பொருட்களை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment