Entertainment
விஸ்வரூபம் 2 டிரைலர் தேதி அறிவிப்பு
நடிகர் கமல்ஹாசன் நடித்து முடித்துள்ள விஸ்வரூபம் 2′ திரைப்படம் சென்சார் சான்றிதழ் பெற்று சரியான ரிலீஸ் தேதிக்காக காத்து கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்வரூபம் 2′ படத்தின் டிரைலர் நாளை மறுநாள் அதாவது ஜூன் 11ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஸ்வரூபம்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி சூப்பர் ஹிட் ஆனது போல் இந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரைலரிலேயே ரிலீஸ் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது
கமல்ஹாசன், ராகுல் போஸ், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கமல்ஹாசன் தயாரித்து இயக்கியுள்ள இந்த படம் இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
