விஷ்ணு பகவான் ஆமை வடிவமெடுத்து நமக்கு உணர்த்துவது என்ன?!


09b856e4479299f71ae72369418a8e1b

ஆமை என்ற பேரை கேட்டவுடன் நம் நினைவில் வருவது அமீனா புகுந்த வீடும், ஆமை புகுந்த வீடும் உருப்படாது என்பதே. ஆனா, ஆமை என்றால் கல்லாமை, பொறாமை மாதிரியான ஆமைகள்ன்னு பகுத்தறிவுவாதிகள் சொல்வர். அப்படி வீட்டை உருப்பட விடாத ஆமை வடிவினை ஏன் விஷ்ணு பகவான் எடுத்தார்?!

ஆமை பார்க்க அத்தனை அழகாய் இருக்காது. வேகமாய் நடக்காது. அப்படி இருந்தும் விஷ்ணுபகவான் எதை உணர்த்த ஆமை வடிவமெடுத்தார்?!

ஆமை நீண்ட காலம் உயிர் வாழும். எல்லா உயிர்களுக்குமென தனித்தன்மை உண்டு. அதுப்போலவே ஆமைக்கும் தனித்தன்மை உண்டு. மனிதர்கள் தாங்கள் சுமக்கும் கருவை தன்னுள்ளே வைத்திருந்து உயிர்பெற செய்வார்கள். கோழி முட்டையிட்டு , அடைக்காத்தால் மூலமாய் தன் ஸ்பரிசம் தீண்டல் வழியே தன் உடலின் சூட்டை கொண்டு குஞ்சு பொறிக்கும். மீன், முட்டையிட்டு தன் கண்கள் வழியே அந்த முட்டையை பார்த்துக்கொண்டே தன் பார்வையின் வழியே முட்டையை உயிர்பெற செய்யும்.

ஆனால் , ஆமை கொஞ்சம் வித்தியாசமானது, அது கடலிலிருந்து வெளியே வந்து கடற்கரையில் தன் முட்டைகளை இட்டு, அதை மணல் கொண்டு மூடிவிட்டு, உடனே கடலுக்குள் சென்று விடும். அதன் அன்றாட வாழ்வை மேற்கொள்ளும். அதேவேளையில் அதன் சிந்தனை முழுக்க அந்த முட்டைகள் மீதே இருக்கும். அது எத்தனை கடல் கடந்து இருந்தாலும் அதன் சிந்தனை அந்த முட்டைகள் மீதே இருக்கும். அந்த சிந்தனையே எங்கோ இருக்கும் அந்த முட்டைகள் உள் ஓர் தாயின் அரவணைப்பை கொடுத்து அந்த முட்டைகளை உயிர் பெற செய்யும்.

66ddc8cd189223c578b33244950d8259-1

அதுபோலவே, நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நாம் எங்கு இருந்தாலும்,  எப்படி இருந்தாலும்  என்ன செய்து கொண்டு இருந்தாலும் 
நம்மை படைத்த இறைவன் நம்மை எப்போதும் இடைவிடாது நம்மை நோக்கி கொண்டே இருக்கிறான். அவன் எங்கும் நிறைந்து எப்போதும் நம் மீது நமக்கே இல்லாத அக்கறையோடு காத்தருளிகொண்டு இருக்கிறான் என்று உணர்த்தவே விஷ்ணு பகவான் கூர்ம அவதாரம் எனப்படும் ஆமை வடிவெடுத்தான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews