ஆர்யாவிற்காக மிகப்பெரிய ஆஃபரை தூக்கி எறிந்த விஷ்ணுவர்தன்….

சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்து விடாது. அப்படியே கிடைத்தாலும் இங்கு இருக்கும் பாலிடிக்ஸ் காரணமாக பலருக்கு வாய்ப்புகள் பறிபோயுள்ளது. அப்படி ஆர்யாவிற்கு கிடைத்த வாய்ப்பு பறிபோய்விடக்கூடாது என்பதற்காக இயக்குனர் விஷ்ணுவர்தன் செய்துள்ள செயல் பிரம்மிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய விஷ்ணுவர்தன், “அறிந்தும் அறியாமலும் படத்தை தொடர்ந்து அதே தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்க நான் ஒப்பந்தமாகி இருந்தேன். அந்த படத்தில் ஆர்யா மற்றும் பரத்தை நான் கமிட் செய்திருந்தேன். அப்போது ஒரு தயாரிப்பாளர் ஒரு பெரிய ஸ்டாரை வைத்து, இந்தப் படத்தை இயக்குங்கள் என்றார்.

அதற்கு சம்பளமாக எனக்கு, நான் அப்போது வாங்கிக்கொண்டிருந்த சம்பளத்தை விட 50 மடங்கு அதிகமாக தருவதாக கூறினர். அந்த ஆஃபர் மிகப் பெரியதாக இருந்த போதும் நான் அதை ஒத்துக்கொள்ளவில்லை. அந்த ஆஃபரை மட்டும் நான் ஏற்றுக்கொண்டிருந்தால் பின்னாளில் மிகப் பெரிய துரோகமாக மாறியிருக்கும்.

அதுபோன்ற தவறை என் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் செய்யக்கூடாது என்று நினைக்கிறேன். காரணம் நான் ஒருவருக்கு வாக்கு கொடுத்துவிட்டேன். பணத்துக்காக நான் ஒருவரின் கனவை சிதைக்கக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தேன்” என கூறியுள்ளார்.

இந்த பேட்டியில் விஷ்ணுவர்தன் குறிப்பிட்டுள்ள படம் தான் பட்டியல். அந்த சமயத்தில் ஆர்யா திரையுலகில் நுழைந்த புதிது. பட்டியல் படம் அவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்று தந்தது. ஒருவேளை விஷ்ணுவர்தன் அந்த ஆஃபரை ஏற்று கொண்டிருந்தால் தற்போது ஆர்யா இந்த இடத்தை அடைந்திருக்க மாட்டார். ஆர்யாவிற்காக விஷ்ணுவர்தன் செய்த செயல் மிகவும் பெரியது என ரசிகர்கள் அவரை பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment