
பொழுதுபோக்கு
விஷ்னு விஷால் நடிப்பில் கட்டா குஸ்தி படத்தின் கலக்கல் அப்டேட்!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஷ்னு விஷால், வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி தன்னுடைய சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதை தொடர்ந்து நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி , ராட்ஷசன் போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.சமீபத்தில் FIR திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஷால் நடிக்கும் மோகன் தாஸ் திரைப்படம் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதை தொடர்ந்து அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிக்கும் திரைப்படம் கட்டா குஸ்தி.
இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் தமிழில் கட்டா குஸ்தி மற்றும் தெலுங்கில் மட்டி குஸ்தி என இரு மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது.விஷ்ணு விஷால் ஹீரோவாகவும் ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஹீரோயினாகவும் நடிக்கிறார்.
இத்திரைப்படம் பாரம்பரியமான கட்டா குஸ்தி சண்டையை மையப்படுத்தி கதைக்களம் அமைந்துள்ளது. படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 80 சதவீத படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாகவும் தற்பொழுது கேரளாவில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பிரசன்னா வெளியிட்ட சர்பிரைஸ் வீடியோ!
இந்த ஆண்டில் (2022) கட்டா குஸ்தி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என விஷ்ணு விஷால் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தற்போழுது கட்டா குஸ்தி பயிற்சியில் ஈடுபடும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…
#GattaKusthi (tamil)#MattiKusthi (telugu)
80 prcnt shoot complete..
Shoot going on in kerala now..
2022 release…Vishnu Vishal
The producer@RTTeamWorks@VVStudioz@teamaimpr @UrsVamsiShekar pic.twitter.com/EYNlSckT1o— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) July 28, 2022
