தந்தை மகன் படத்தில் இணைந்த விஷால்… சூடு பிடிக்கும் சினிமா

e7393743fce07ffc4fb355b4fecbfc98

இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு எனிமி (Enemy) என்று பெயரிடப்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அண்மையில் ஹைதராபாத்தில் பிரமாண்டமாக பாடல் ஷூட்டிங் நடைபெற்றது. மேலும் படத்தில்  வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகர் பிரகாஷ் ராஜூம் இணைந்துள்ளார்.

இந்நிலையில் எனிமி திரைப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கப்போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது, குட்டிப்புலி, கொம்பன், மருது போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் விஷாலின் அடுத்த படம் அமைகிறது. 

இது ஒரு தந்தை மற்றும் மகன் உறவு சார்ந்த படமாக இருக்க போகிறது என்றும். இந்த படத்தை நடிகர் விஷாலின் ‘விஷால் பிலிம் பேக்டரி’ தயாரிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ஏற்கனவே விஷால் மற்றும் முத்தையா காம்போவில் வெளியான கிராமத்து கதையான மருது மக்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.